ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 300 பட்டதாரிகளும் 250 மீனவர்களும் சுதந்திரக் கட்சியில் இணைவு!

METRO-SLFP (4)

-பி.முஹாஜிரீன்-

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுமார் 250 மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (04.01.2013) ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன முன்னிலையில் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.ஜெயாகர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கடற்றொழில் பரிசோதகர் என்.கந்தசாமி மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் இ.துரைராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று-8, 9, சின்னமுகத்துவாராம், அலிக்கம்பை, நாவற்காடு, பனங்காடு, கோளாவில், இத்தியடி, ஆலையடிவேம்பு, கன்னகி கிராமம் போன்ற கிராமப் பிரிவுகளில் வதியும் மீனவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் 300 இளம் பட்டதாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஜெயாகரின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவிடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர்களான எம்.கோபாலரெட்ணம், எஸ்.கரன், கே.லவநாதன், வீ.ஜெகதீசன், பாராளுமன்ற உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ், பிரதேச சபை உறுப்பினர் எஸ.ரி.விக்னேஸ்வரன், மாவட்ட இணைப்பாளர் எஸ்.நந்தகுமார் உட்பட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

METRO-SLFP (1)METRO-SLFP (2)METRO-SLFP (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*