சவூதி அரேபியாவில் றிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

rizan_nafeek(2)சவூதி அரேபியாவில் குழந்தை ஒன்றைக் கொலை செய்தார் என்ற குற்றச் சாட்டுக்கு இலக்கான இலங்கை பணிப்பெண் மூதூர் றிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை இன்று சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு தான் பணியாற்றிய வீட்டில் நான்கு மாத குழந்தையினை கொலை செய்ததாக இவர் குற்றஞ் சாட்டப்பட்டு நீண்ட காலமாக அந்நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தையை கொலை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அந்நாட்டு நீதிமன்றம் ரிசானாவிற்கு மரண தண்டனை தீர்ப்பு விதித்திருந்தது.

இதன் பிரகாரம் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. إنا لله وإنا إليه راجعون
    We extend our heartfelt condolences to Rizana & her family on the death of Rizana.
    We pray to Allah Almighty to bless the deceased with His grace and admit her into Paradise. “We belong to Allah and to Him we return”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*