வடிகட்டிய முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பிவிட்டு தமக்காக பேசவில்லை என்று சொல்வது மல்லாக்க படுத்து துப்புவது போன்றதே!

Voiceவடிகட்டிய முட்டாள்களை உங்கள் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக அனுப்பி விட்டு பாரளுமன்றத்தில் பேசவில்லை என்று சொன்னால் மல்லாக்க படுத்துக்கொண்டு துப்புவது போலதான். உங்கள் கைகளால் விதைத்த விதையை நீங்கள் அறுவடை செய்தே ஆகவேண்டும்.

சலுகைகளுக்கு பழக்கப்பட்டவர்கள் உரிமைகளை எப்படி பேசுவது. குடிகாரனை குடிக்காதே என்று சொன்னால் கேட்கவா போகிறான். அவன் குடிக்காமல் இருக்கவேண்டும் என்றால் அவன் ஏதோ வகையில் தனிமைபடுதப்பட வேண்டும் அல்லது அவனாகவே உணர வேண்டும். இன்றைய அரசியல் வாதிகளை பொறுத்தவரை முதலாவது முயற்சியே பொருத்தமானது.

ஆனால் அதை செய்வதற்கு தாயார் இல்லை. நீங்கள் அறிந்து செய்கின்ற தவறு நல்லவர்களையும் பாதிக்கும். இன்னும் அறியாமை காலத்து மக்களுக்கு சமமானவர்களாகவும் ஆகிவிடுகின்றீர்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகள் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன்.

ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (‘அமானத்’ எனும்) நம்பகத்தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு (என்னுடைய வழியான) சுன்னாவிலிருக்கும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.)

இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான்.

அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் ‘நம்பகத்தன்மை’ எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இராது.

பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும். (அளவுக்கு நம்பிக்கையாளர் அரிதாகி விடுவார்கள்).

மேலும், ஒருவரைப் பற்றி ‘அவரின் அறிவுதான் என்ன! அவரின் விவேகம் தான் என்ன! அவரின் வீரம் என்ன!’ என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதரின் இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை (ஈமான்) இராது. ஷஹிஹ் புகாரீ

(ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபுகளுக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்கள் (‘இந்த அளவிற்கு’ என்று கூறியபோது, தம் கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.

அப்போது ‘நல்லவர்கள் நம்மிடையே இருக்கும் போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?’ என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம். தீமை பெருத்துவிட்டால்’ என்று பதிலளித்தார்கள். ஷஹிஹ் புகாரீ

அபூஹுரைரா(ரலி)அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும். செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை’ என்று பதிலளித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*