வர்த்தகப் பிரமுகர் அபூதாஹிர் காலமானார்!

Metro_Breaking News1

கல்முனைப் பிரதேசத்தின் பிரபல வர்த்தகப் பிரமுகர் அபூதாஹிர் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் கொழும்பு பொது வைத்தியசாலையில் காலமானார்.

மருதமுனையை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருது-3 அல்கமரூன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் லுமாலா நிறுவனத்தின் கிழக்கு மாகாண முகவராக திகழ்ந்த தாஹிரா சைக்கிள் ஸ்டோர்ஸ் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1980களில் கல்முனை நகர வர்த்தகர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மர்ஹூம் இஸ்மாயில் (வெள்ளைத்தம்பி டெய்லர்) – ஆஷுரா உம்மா தம்பதியரின் மருமகனும் முஹாஜிரா, முஜாஹிதா, முஜாஹிதீன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஏ.பஸில் அவர்களின் மாமனாரும் மருதமுனை ஷாபி மாஸ்டரின் சகோதரரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*