சிறுவனின் ஆண் குறியில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை; சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சாதனை!

Slide2
-அஸ்லம் எஸ்.மௌலானா-

பத்து வயது சிறுவன் ஒருவரது ஆண் குறியில் சிறுநீர் வழி பிறப்பால் கீழ் நோக்கி இருந்தமையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

நேற்று புதன்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலேயே இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணரான மருதமுனை டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்களினால் இச்சாதனை நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் இத்தகைய சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த இச்சிறுவன் கல்முனையிலுள்ள வைத்தியசாலை ஒன்றினால் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சத்திர சிகிச்சைக்கான காலம் இழுத்தடிக்கப்பட்டு வந்த சூழ்நிலையிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சத்திர சிகிச்சையை கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்வதாயின் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் செலவாகும் என்று கூறப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

தமது பிள்ளைக்கு இந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு அவரை சாதாரண நிலைக்குக் கொண்டு வந்ததுடன் தமது நீண்ட கால துன்பகரமான நிலையில் இருந்து தம்மை விடுவித்தமைக்காக குறித்த சிறுவனின் பெற்றோர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கும் சத்திர சிகிச்சை நிபுணருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

Slide3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*