திருமண வீட்டு உறவினர்கள் பயணித்த பஸ் ஆற்றில் பாய்ந்ததால் 29பேர் பலி; பாகிஸ்தானில் பரிதாப சம்பவம்!

Pakistanபாகிஸ்தானில் பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழை காரணமாக ஆறு நிரம்பி இருந்ததை கவனிக்காமல் பஸ் சாரதி பஸ்சை செலுத்தியதன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பஸ்ஸில் திருமண வீட்டு உறவினர்கள் 35 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை 29 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கி காணாமல் போன மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*