பதுளையில் பெண்கள் உட்பட 13 பேர் கைது!

பதுளையில் 11 பெண்கள் உட்பட 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை நகரில் வான் ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது அதிலிருந்த 13 நபர்களையே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, தோப்பூர், துட்டுவெவ, மஸ்கெலியா, கினகத்தேன, பசறை, கிளிநொச்சி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பற்றிய விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என்று மேலும் அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*