மஹர பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது; சிறைச்சாலை அமைச்சர் சந்திரசிறி, அமைச்சர் பௌசியிடம் உறுதி!

chandirasiri gajaheeraமஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, சிரேஷ்ட அமைச்சர் பௌசியிடம் உறுதியளித்துள்ளார்.

குறிப்பிட்ட பள்ளிவாசலின் செயற்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பு நிறுத்தும் படியும் இவ்வுத்தரவு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் பணிப்பின் பேரிலேயே வழங்கப்படுவதாகவும் சிறைச்சாலை அத்தியட்சகர் பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

அதேவேளை பள்ளிவாசல் சுவரில் பன்றியின் படம் வரையப்பட்டு ஹலால் பன்றி என்ற வாசகம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பரிபாலன சபை அமைச்சர் பெளசியை சந்தித்து முறையிட்டதை அடுத்து அவர் அமைச்சர் கஜதீரவை தொடர்பு கொண்டு பள்ளிவாசலின் அவசியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் பள்ளிவாசலின் பதிவு தொடர்பான ஆவணங்கள் அமைச்சர் பெளசியினால் கஜதீரவிடம் சமர்பிக்கப்பட்டன.

இதன்போதே இப்பள்ளிவாசல் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என சிறைச்சாலை அமைச்சர் சந்திரசிறி கஜதீர, சிரேஷ்ட அமைச்சர் பௌசியிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த அறிவிப்பை சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் விடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*