முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ இடைவெளியே இன்றைய மிகப் பெரியசவாலாகும்!

Leaderமுஸ்லிம் சமூகத்தின் அரசியல் பொருளாதாரம் போன்றன முற்றாக கைவிட்டுப் போயுள்ள இக்கால கட்டத்தில் முஸ்லிம்களின் முக்கிய மூலாதாரமாக, அடிப்படையாக அமைவது கல்வி மட்டும்தான் என அபிவிருத்திக் கற்கைகள் மையத்தின் பணிப்பாளரும், ஆய்வாளருமான அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன் தெரிவித்தார்.

இறக்காமம் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அஷ்ஷெய்க் எம்.எச். வஹாப்(இஸ்லாஹி) எழுதிய ஆளுமை மிக்க மாணவன் ஆரோக்கியமான கற்றலை நோக்கி எனும் நூலின் அறிமுக விழா இறக்காமம் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல் நௌபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆய்வாளர் றவூப் ஸெய்ன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். எங்களுக்கு கைகொடுக்கக் கூடியவற்றிலே இக்கல்வியினுடைய முக்கிய தரப்பினராகவிருக்கின்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்ற மூன்று தரப்பினரும் எமது சமூகத்தில் கல்வியை ஏற்படுத்துவதற்கு எவ்வாறான பங்களிப்பினை மேற் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக காத்திரமான ஒரு முயற்சியின் பலனாக இந் நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

இப்பகைப்புலனில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டை இலக்கு வைத்து இந்நூல் வெளிவருவது மிகுந்த மன ஆறுதலைத் தருகின்றது. மாணவர்களை அவர்களுக்கு வெளியேயுள்ள பெற்றோரும் பிறரும் புரிந்துகொள்ள இந்நூல் உதவுகின்றது.  மாணவர்களின் இயல்பு, பலங்கள், பலவீனங்களைக் கருத்திக் கொண்டு, வினைத்திறனுள்ள கற்றலுக்கு அவர்களை எவ்வாறு தயார்செய்யலாம் என்பதற்கு தெளிவான விடைதருகின்றது இந்நூல்.

மாணவனைக் கற்கும் எந்திரமாக மட்டும் நோக்காமல், அவனை உயிர்த்துடிப்பும் உத்வேகமும் இலட்சிய வேட்கையும் கொண்ட ஓர் உன்னத ஆளுமையாய் வளர்த்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இந்நூல், அதற்கான வழிகாட்;டல்களையும் முன்வைத்திருப்பது மிக முக்கிய அம்சமாகவே காணப்படுகின்றது.

வெறுமனே தலைகளை உருவாக்குவது சமூகத்தின் எழுட்சியாக அமைந்துவிடாது. ஒரு சமூகத்தின் மாற்றத்தின் அடிப்படையில் அநடத தலைகள் மனித வளங்களாகவும் இருக்க வேண்டும். உலக நாடுகளை நாம் எடுத்துக் கொண்டால் 55 பெரும் முஸ்லிம் நாடுகளுக்குமேல் காணப்படகின்றன. இதில் 187 கோடி தலைகளைக் கொண்ட முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தலைகள் வெறும் தலைகளாக மட்டுமல்லாமல் மனிதவளங்களைக் கொண்டனவாக உருவாக்கவேண்டியது எமது தேவையாகக் காணப்படுகின்றது. அந்த இடைவெளியை இல்லாமல் செய்வதற்கு நல்ல தலைமைத்துவப்பண்பாடுகளுடன் கூடிய ஆளுமைகள் நிறைந்த மனிதர்களை உருவாக்க வேண்டும்.

தலைமைத்துவம் என்பது எமது சமூகத்தில் உலகளாவியரீதியில் நாம் இழந்து நிற்கின்ற ஒரு மிகப் பெரிய சொத்தாகும். முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் நீங்கள் மூன்று பேர் ஓரிடத்துக் கெல்வதாயினும் அதில் ஒருவரை தலைவராக வைத்துக் கொள்ளுங்கள். தலைவன் அற்ற சமூகம் இடையன் அல்லாத மந்தைகளைப் போலாகும். அந்த மந்தைகள் எந்தவொரு திசைக்கும் செல்லும், அதனை எந்தவொரு ஓனாயும் வேட்டையாடவும் முடியும் என நபி(ஸல்) அவர்கள் தலைமைத்தவத்தின் முக்கியத்தவம் பற்றி கூறியுள்ளார்கள்.

இன்று காணப்படும் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ இடைவெளியானது இஸ்லாமிய சமூகத்திற்கு இருக்கின்ற ஒரு மிகப் பெரியசவாலாகும். இந்த தலைமைத்துவத்துக்கான பண்புகளையும், ஆயத்தங்களையும் மாணவப்பருவத்திலிருந்தே பிள்ளைகளில் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையினை, உண்மையினை ஆளுமை மிக்க மாணவர்கள் என்ற இந்த நூலிலே வஹாப் அவர்கள் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார்கள்.

ஒரு தனிமனிதனுக்க இருக்க வேண்டியப பண்புகளை அவர் அடையாளம் கண்டிருக்கிறார். கூட்டங்களை எவ்வாறு நிருவகிக்கலாம்? ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு என்ன? என்பது பற்றிய வரையறை அவசியம், நேர முகாமைத்தவம் செய்யாத எந்த மனிதர்களும் உயர்ந்த எந்த இலக்கையும் அடைய முடியாது என்ற அடிப்படையான உண்மைகளை எல்லாம் இந்த நூலிலே சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுடைய கல்வியில் 1990 களிலே குறிப்பாக உயர் கல்வியில் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்தது என்ற ஒரு விமர்சனம், அல்லது ஒரு மனக்குறை முஸ்லிம் சமூகத்திலே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளைப்பார்ப்போமானால் அஇந்த வீழ்ச்சியிலிருந்த முஸ்லிம் சமூகம் தன்னை சுதாகரித்தக் கொண்டு எழுந்து  ஒரு பாரிய உயர்ச்சியை அடைவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக முஸ்லிம் சமூகத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி மீதான ஆர்வம், பற்று,அக்கரை மிக அதீதமாகக் காணப்பட்டதாகும். கடந்த 2010-2011 ம் ஆண்டில்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  அறிக்கை தொடர்பாக பார்க்கின்ற போது உண்மையில் மகிழ்ச்சியைத்தருகின்றது. இதனை வைத்து நாங்கள் நூறு வீதம் மகிழ்ச்சி காணமுடியாது. 1990 களில் 2.5 வீதமாகக் காணப்பட்டது. தற்பொது 1680 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்று 7.5 வீத உயர்வு கண்டுள்ளது.

இதிலும் பூரணமான திருப்தியை அடைய முடியாது. காரணம் 14 அரசாங்க பல்கலைக்கழகங்களிலே கலை,வர்த்தகம் ஆகிய துறைகளை நிறப்புவர்களாக எங்களுடைய மாணவாக்ள் 80 வீதமாகக் காணப்படுகின்றனர். விஞ்ஞானம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறகளில் மிகச் சொற்ப மானவர்ளே உள்ளனர். ஊளியர் சந்தைகN;கற்ப தெற்காசியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழமாகத் திகழும் இலங்கை மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு மிக, மிக் குறைந்த சொற்ப முஸ்லிம் மாணவர்களே அனுமதி பெறுகின்னறனர். இதற்கு இன்னும் பல படிமுறைகளை நாம் தாண்டவேண்டி உள்ளது.

இலங்கையினுடைய கல்விச் சூழலிழும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட காணப்படுகின்றது. இலங்கையில் க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்களில் ஐந்து சத வீதமான மாணவர்களே பல்கலைக்கழம் நுளைகின்றனர். அமைரிக்காவில் இது 40 வீதமாகவும், கனடாவில் 35 வீதமாகவும் காணப்படுகின்றது. தற்போது இலங்கையில் வெளிவாரியாகவும் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் கல்வி அமைச்சினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேலும் விகிதாசாரம் குறைவடையவள்ளது. இதனைப் பார்க்கும் போது உயர் கல்வியானது இலங்கையில் ஒரு போட்டித்தன்னை கொண்டதாகவே மாற்றப்பட்டுவருகின்றது.

ஒரு குறிப்பிட்ட துறைக்கு அப்பால் வேறு துறைகளுடன் இணைந்து கற்பதற்கும், மூன்றாம் நிலைக்கல்வியில் இருக்கின்ற தொழில் நிலைக்கல்வியும் இலங்iயில் அதிகம் காணப்படுகின்றது. ஆனால் எங்களுடைய மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றது. இதனால் அவர்கள் இந்த வாய்ப்பை இழக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். மேலும் எமது சமூகத்தில் நிபுனத்துவம் கொண்டவர்கள் மிகவும் அரிதாகக் காணப்படுவதும் பாரிய குறைபாடகவுள்ளது.

ஆக அறிவு வெடித்து சிதறும் இக்கால யுகத்தினுடய மிகப் பெரிய பலம் அறிவுதான். பணத்தைவிட நிபுனத்தவம் கொண்ட அறிவதான் மிகப் பெரிய பலம் என்பதை முஸ்லிம் சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இதுதான் எங்களடைய அடிப்படையான விடயம். அறிவரீதியாக இந்த உலகத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்பதுதான் இன்று இருக்pன்ற ஒர வழிமுறையாகும்.

இஸ்லாமிய சமூகம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்றால் அதற்கு மூன்று பலங்கள் தேவை என்று அல்குர்ஆன் கூறுகின்றது. 01.அறிவு(விஞ்ஞான, தொழில்நுட்பத்துறைரீதியான) 02. ஒற்றுமை, 03ஆத்மீகப் பலம் போன்றனவாகும். ஆனால் 55 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் அறிவத்துறை ஆராய்ச்சிக்காக தமது வருடாந்த நிதியொதுக்கீட்டில் 1.9 வீதம் மட்டுமே செலவ செய்கின்றது. ஆனால் சிறிய இஸ்ரேல் நாடானது 4 வீதம் இதற்காக ஒதுக்கீடு செய்கின்றது என்றால் நாம் அறிவியல்,தொழில்நுட்பத்துறையில் எங்கே நிற்கின்றோம்.

இன்று முஸ்லிம் சமூகத்தில் முறையான தலைமைத்துவம் இல்லை, திட்டமிடலில்லை, வழிநடத்தலில்லை. இதனாலேயே இன்று இலங்கையில் பாரிய அச்சநிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. ஒரு சமூகம் அரசியல் சுதந்திரத்தை இழப்பதைவிட தமது கலாசார சுதந்திரத்தை இழப்பது மிக பெரிய ஆபத்தாகும். இந்த நாட்டிலே காக்கியுடை அணியாத பொலிஸார் என தங்களைக் கூறிழக் கொண்டு நிற்பவர்களுக்குப் பின்னால் நிற்பவர்கள் யார் என்பது மிகத் தெளிவு. எமது அரசியல் கட்சிகள், ஜம்மியத்துல் உலமா, சிவில் சமூகங்கள் ஒற்றுமைப்பட்டால் நிட்சயமாக நாம் வெற்றிபெறலாம். ஒற்றுமைப் படுவோமா? பிரித்தாளல் என்ற பொறியில் கீழே நாம் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் அரசியலில் மிக தெளிவாக சிந்திக்க வேண்டும். அரசன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என்பத பொய்யானது. மக்கள் எவ்வழியோ ஆட்சியாளன் அவ்வழி என்று கூறுகின்றேன்.

எமது அரசியல் பலத்தை சரியாகவும்,முறையாகவும் பயன் படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இனிமேலும் அரசியல் வாதிகளின் பசப்பு வார்த்தைகளுக்குபு பின்னால் முஸ்லிம் சமூம் செல்லுமானால் அவர்கள் செய்யும் துரோகத்திற்கும், பாவங்களுக்கும் வாக்களித்து அனுப்பிய எமக்கும் இறைவனிடத்தில் பெரும் குற்றம் சுமத்தப்படும். இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? என்ன நடக்கப் போகின்றது. என்பது தெரியாமல் இருப்போமானால் நம்மைவிட கோமாளிகள் எவரும் இருக்க முடியாது என்றுதான கூறவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*