மட்டக்களப்பு ஹோட்டலில் விபச்சார விடுதி; ராணுவ முக்கியஸ்தர்கள் உட்பட 6 பேர் கைது!

Arst(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் மூவரையும் ஆண்கள் மூவரையும் மட்டக்களப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள ஹோட்டல்களில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்தே நேற்று இரவு சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டு அவர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.இந்திரனின் உத்தரவிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிஞ்சிலி குணசேகர தலைமையிலான குழுவினர் குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு அநாகரிகமான முறையில் இருந்த அறுவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண்களில் இருவர் படைத்தரப்பில் முக்கிய பதவிகளை வகிக்கப்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மற்றுமொருவர் அக்கறைப்பற்றைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவராவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் முஸ்லிம் பெண் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சிங்களப் பெண் கந்தளாயைச் சேர்ந்தவர் என்றும்  தமிழ்ப் பெண் பருத்திச்சேனையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*