மக்களை ஏமாற்றாமல் கட்சியை கலைத்து விட்டு சுதந்திரக்கட்சியுடன் இணைந்தால் இன்னும் நெருக்கம் ஏற்படும் அல்லவா?

atha

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளின் போது அன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதன் மூலமே  முஸ்லிம்களின் தன்மானத்தை காக்க முடியும் என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் இன்று தாம் ராஜினாமா செய்வதன் மூலம் நன்மை கிடைக்குமா என கேட்பது இவர்களின் சயநல சிந்தனையையே காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இன்று முஸ்லிம் சமூகம் சிங்கள பேரினவாதத்தால் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் இருந்தே தீர்க்க முடியும் என முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் பழைய பல்லவியை பேசுவதன் மூலம் முஸ்லிம்களை வழமை போன்று ஏமாற்றுகிறார்கள்.

அத்துடன் அரசாங்கத்துடன் இருந்தால்த்தான் ஜனாதிபதியை சந்தித்து இது பற்றி பேச முடியும் எனவும் தமது கையாலாகா தனத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

அவ்வாறாயின் அமைச்சர்களாக இருப்பதை விட ஜனாதிபதியின் இணைப்பாளர்களாக இருந்தால் அதுவும் தமது கட்சிகளை கலைத்து விட்டு கலைத்து விட்டு ஜனாதிபதியின் கட்சியான சுதந்திரக்கட்சியுடன் இணைந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் ஏற்படும் அல்லவா என்று மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என நினைத்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு செய்ய இவர்கள் முன்வருவார்களா?

உண்மையில் அமைச்சர்களாக அதாவது அரசாங்கத்தின் நக்குத்திண்ணிகளாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு சார்பாக எதையும் முதுகெலும்புடன் பேச முடியாது என்பதே யதார்த்தமாகும். அதிகமாக பேசினால் விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் என்பது ஜே ஆர் காலம் முதல் நமது அமைச்சர்களுக்கு இன்னமும் உறைக்காத  சொல்லாகும்.

அமைச்சர்களாக இருந்தால் அரசிடமிருந்து சில சலுகைகளை பெறலாம். அதுவும் குறிப்பிட்ட சில வால்களுக்கே கிடைக்கும். சுமூகத்துக்கு பெரிதாக எதுவும் கிடைக்காது. அதே வேளை இனவாதமற்ற அரசாங்கமாயின் சகல இனத்தவரும் சமானமாக கருதப்பட்டு சமூகத்துக்கு சிறந்த சேவைகள் கிடைக்கும். ஆனால் இன்றிருக்கும் நிலை என்ன?

அரசுக்கு ஆதரவளித்தும் தமக்கு எதுவுமே முடியவில்லை என ஒப்பாரி வைத்துக்கொண்டே அமைச்சர்களாக இருந்தால்த்தான் இவற்றை பேசி தீர்க்கலாம் என்றும் கூறுவதை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இவர்கள்  அமைச்சர்களாக இருந்து இந்த சமூகத்துக்கு இது வரை என்ன உரிமையை பெற்றுக்கொடுத்தார்கள் என்பதையாவது கூற முடியுமா?

இருந்த உரிமைகளான ஹலாலையும், நிம்மதியாக மதத்தை பின்பற்றி வாழ்வதையும் இந்த அரசாங்கம் திட்டமிட்டு பறித்ததற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் என்ற வகையில் இவர்களும் துணை போனது மட்டும்தான் மிச்சம். ஆக இத்தகைய கோழைத் தலைவர்களால் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டு எலும்பத்துண்டுகளை வீசி விட்டால் முஸ்லிம் சமூகம் பற்றி நாடாளுமன்றில் பேச எந்த அமைச்னும் முன்வரமாட்டான் என்ற தைரியம் அரசுக்கு ஏற்பட்டு;ள்ளது.

இந்த நிலையில் அமைச்சுப்பதவியில் இருப்பதை விட அதனை தூக்கி எறிவதன் மூலம் சமூகத்தின் தன்மானம் காக்கப்படும். ஆனால் கைசேதம் என்னவென்றால் மு. காவின் வரலாற்றில் சமூகத்துக்காக இதுவரை அமைச்சுப்பதவியை தூக்கி வீசியதாக வரலாறு இல்லை. இனியும் அடுத்த தேர்தல் வரை இதனை செய்யமாட்டார்கள் என்பதால்தான் இன்று சமூகம் தன்மானத்தை இழந்து அவஸ்தைகளை தினமும் பெற்றுக்கொண்டிருக்கின்றது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Subscribe to Comments RSS Feed in this post

3 Responses

  1. moulavi you are correct but if u become like this u also same ok

  2. Moulavi Muslim Congressai Maddum Elakku Vaitthu Arikkai Viduvathan Marmamthaan Aenna?

    • முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த தவம் போன்றோர்தான் அரசிலிருந்தால்தான் பேசலாம் என கூறுகின்றனர். அதாவுல்லா சத்தமே இல்லை. முபாறக் மௌலவி அனைத்து முஸ்லிம் கட்சிகளையும், அனைத்து முஸ்லிம் அமைச்சர்களையும் கண்டிப்பதை படிக்கவில்லையா?
      ஆப+முஸ்னத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*