தமிழருக்கு சம்பந்தன் போல் முஸ்லிம்களுக்கு முதுகெலும்புள்ள தலைமைத்துவம் இல்லை; ரணில் கவலை!

images (22)இந்நாட்டின் முஸ்லிம்  மக்களுக்காக தான் முன்னிற்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மான்னாரில் இன்று ஐ.தே.க.யின் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளை தட்டில் வைத்து ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளனர்.

இந்நாட்டில் தமிழர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று கதைக்க சம்பந்தன் இருக்கிறார். எனினும் முஸ்லிம்கள் தொடர்பில் கதைக்க யாரும் இல்லை. எனவே நான் அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.

அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் பெருமளவில் இருந்த போதிலும் அவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. வெறும் காய் நகர்த்தலுக்காக நீங்கள் செய்வதை நாம் வரவேற்கத்தான் வேனும் ஏனெனில் நம் முனாபிக்குகளை விட இது பரவாயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*