கல்முனை, சாய்ந்தமருது, பொத்துவில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்!

images-றிஸ்கான் முகம்மட்-

இன்று இடம்பெற்ற இலங்கையின் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலின் முடிவுகளில் சில இன்று மாலை எமக்குக் கிடைக்கப் பெற்றது.

 

 

சாய்ந்தமருது பிரதேச செயலகம்

ஏ.எம். றிஸான் – 198
ஏ.எம். ஜஹான் – 174
ஏ.எம். அஸீம் – 09
ஏ.எம். ஸஜான் – 08

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 391
நிராகரிக்கப்பட்வை – 02

கல்முனை பிரதேச செயலகம்

ஏ.எம்.எம். முஜீப் – 339
எம்.ஏ.ஏ. ஆபித் – 6
ஏ.ஏ. நயீம் – 5

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 355
நிராகரிக்கப்பட்வை – 05

பொத்துவில் பிரதேச செயலகம்

ஐ.எல்.ஹில்முடீன் – 203
(72 மேலதிக வாக்குகள்)

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 340
நிராகரிக்கப்பட்வை – 06

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

-றிஸ்கான் ழூமுகம்மட்-

இலங்கையின் 2வது இளைஞர் பாராளுமன்றத்திற்கு 365 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று நாடுபூராகவுமுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று பிரதேச செயலக காரியாலயத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் மேற்பார்வையின் கீழ் இளைஞர் சேவை அதிகாரி எம்.ஹாறூன் தலைமையில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டதுடன் 20 இளைஞர் கழகங்களிலிருந்து 1017 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இத்தேர்தலில் இளைஞர்களும் யுவதிகளும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

Photo4063Photo4066Photo4068Photo4073Photo4071

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*