அஸாத் சாலியின் விடுதலைக்காக கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை!

Azath(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அஸாத் சாலியை விடுதலை செய்வதற்கான அமைப்பு தெவட்டகஹ பள்ளியுடன் இணைந்து இந்த துஆ பிரார்த்தனையை ஏற்பாடு செய்திருந்தது.

அஸாத்; சாலியை விடுதலை செய்வதற்கான அமைப்பில் மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், விக்ரமபாகு கருணரத்ன ஆகியோர் தலைவர்களாக இருக்கின்றனர். அமைப்பின் செயலாளராக முஜிபுர் ரஹ்மான் இருக்கின்றார். இந்த அமைப்பு நேற்று சனிக்கிழமையிலிருந்து அஸாத் சாலியை விடுவிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் யு.ரீ.எம்.அன்வர் உட்பட ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அஸாத் சாலியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

அஸர் தொழுiயின் பின்னர் மௌலவி அஹமது பளீல்(காசிமி) அவர்களினால் விசேட துஆ பிரார்த்தனை நடாத்தப்பட்டது.IMG_5020IMG_5018IMG_5015IMG_5013IMG_5032IMG_5021

 

Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. **** ஏன் அளவி மௌலான, மற்ற முஸ்லிம் அமைச்சர்கள்? அசாதின் தாய் மாமன் (பௌசி) எங்கே? பௌசியும் சேர்ந்துதான் ஜனாதிபதிக்கிட்ட போட்டுக்கொடுத்தாரோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*