அரசாங்கம் புறக்கணிப்பது தொடர்பில் மு.கா. எம்.பி.க்களிடையே சூடான வாதம்; கூட்டம் ஒத்திவைப்பு!

SLMC-Logoஅரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவது குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற கட்டிட தொகுதியில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது தொடர்பில்  முஸ்லிம் காங்கிரஸ் மீது பரவலாக அதிருப்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் எம்.பி.க்கள் மத்தியில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.  இதனை அடுத்து கூட்டம் நாளை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் பாராளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்று தீர்மானம் எட்டப்படுமென மு.கா.செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*