கல்முனை மாநகர சபை ஊழியர்களின் அதிரடி இடை நிறுத்தம்; அவசரமாக கூடுகிறது சபை!

KMC(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையில் அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 112 ஊழியர்கள் நேற்று அதிரடியாக இடை நிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக இன்று வியாழக்கிழமை (06) காலை மாநகர சபையின் விசேட அவசர பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

முதல்வர சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விசேட கூட்டத்த்திற்கான அழைப்பு கடிதங்களை மாநகர ஆணையாளர் லியாகத் அலி கையொப்பமிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த ஊழியர்கள் நேற்று இடை நிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Presentation1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*