சம்மாந்துறை வைத்தியசாலையில் தன்னியக்க ஸ்டெப்ளர் மெசின் மூலம் சத்திர சிகிச்சை; Dr.சமீம் சாதனை!

Slide2
(யு.எம்.இஸ்ஹாக்)

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சம்மாந்துறை அன்வர்  இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தன்னியக்க  ஸ்டெப்ளர் மெசின் பயன்படுத்தப்பட்டு நோயாளி ஒருவருக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை பூரண வெற்றியளித்துள்ளது.

இவ்வரலாற்றுச் சாதனையை அவ்வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஏ.டபிள்யு .எம்.சமீம் நிகழ்த்தியுள்ளார்.

இந்த சத்திர சிகிச்சை நேற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த  வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இது குறித்து சத்திர சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஏ.டபிள் யு .எம்.சமீம் தெரிவிக்கையில்;

“இவ்வாறான சத்திர சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் நடை பெறுவது இதுவே முதல் தடவையாகும். மேலத்தேய நாடுகளில் குறிப்பாக சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகளே இவ்வாறான சத்திர கிச்சைகளை செய்கின்றன.

எனினும்  பிரபலமான எமது நாட்டு வைத்தியசாலைகளில் தற்போது இவ்வாறான சத்திர கிச்சைகள் செய்யப்படுகின்றன .

ஆனால் வளப்பற்றாக்குறையுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த  வைத்தியசாலையில் எம்மால் செய்யப்பட்ட இவ்வாறான சத்திர சிகிச்சை பெரும் பிரயத்தனமான நடவடிக்கையாகும் .

குறிப்பாக மூல நோய் உள்ளவர்களுக்கு அறுவை செய்யாமல் தன்னியக்க  ஸ்டெப்ளர் மெசின் பயன்படுத்தப்பட்டு செய்வதனால் வலியோ அல்லது இதன் பின்னர் மீண்டும் மூல நோய் ஏற்படுவதற்கோ வாய்ப்பு இல்லை.

இச்சத்திர சிகிச்சைக்கு முழுமையாக மயக்கவோ,கூடுதலான நேரமோ தேவைப்படாது” என்று குறிப்பிட்டார்.

இதன் நம்பக தன்மையை வெளிப்படுத்த சத்திர சிகிச்சை செய்த இடத்துக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் வை.டி .எம். அஸீஸ் விசேடமாக  இச்சத்திர சிகிச்சையை பார்வையிட்டார் .

இதேநேரம் மேலும் ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் அங்கு இடம்பெற்றது. சிறுநீரகத்தில் இருந்து மூன்று கற்கள் வெட்டி அகற்றப்பட்டன .

இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்வதென்றால் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் வைத்தியசாலைகளையும் கொழும்பு, கண்டி போன்ற  இடங்களில் தான் பெற முடியும்.

எனினும் எந்த வசதியும் இல்லாத சம்மாந்துறை வைத்தியசாலையில் இவ்வாறான  பாரிய அறிவை சிகிச்சைகளை வழங்கும் வைத்தியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இப்பிரதேச அரசியல்வாதிகளும்  மக்களும்  இது போன்ற வைத்தியசாலைக்கு  உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

Slide7Slide5 Slide6 Slide3 Slide4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*