கிழக்கை தனி மாகாணமாக்கி முஸ்லீம்களை நிம்மதியாக வாழ வைத்தது யார்?

Athaullahஅமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் அதாஉல்லாஹ் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்- பேரினவாதத்துககு துணைபோய் விட்டார் போன்ற ஊடக செய்திகளை பார்க்கின்ற போது தங்களது பதவி நிலைகளை ஸ்திரப்படுத்தி கொள்ளும் இடைநிலை அரசியல் வாதிகள் அமைச்சர் அதாஉல்லாவின மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதையே சுட்டி நிற்கிறது என இழப்பீட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான அஸ்மி.ஏ.கபூர் தெரிவித்தார்.

இழப்பீட்டு ஆய்வு மையத்தின் 5ம் வருட நிருவாகிகள் தெரிவும் கருத்தரங்கும் தெஹிவளையில் மையத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ஆதம்லெப்பை  அஹமட் தலைமையில் இடம்பெற்றபோதே அஸ்மி.ஏ.கபூர் இதனைத் தெரிவித்தார்.

“மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்ளுடைய காலம் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலமாக இருந்தது. தமிழர்களுடைய பிரச்சினைகளைக்கு தீர்வாக இணைந்த வடககு; கிழக்கு மாகாணங்களில் தீர்வு வழங்கும் போது அதில் முஸ்லீம்களின் நிலை தொடர்பாக தெளிவுபடுத்தி இருந்தார்.

யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அததிகளாக்கப்பட்டு சொந்த மண்ணை கூட 20 வருடங்களுக்கு மேலாக செனறு பார்க்க முடியாமல் இருந்த முஸ்லீம்களை தனித்தரப்பாக சமாதன பேச்சு மேசையில் அமர்த்த கோரிக்கை விடுத்த போது அரச தரப்பின் அங்கமாக சென்றது எந்த தலைமை என்பது தெரியாமல் விட்டிருக்க சந்தர்ப்பமில்லை.

மேலும் ஒவ்வொரு தேர்தல்களின் போது உணர்ச்சி பூர்வமான ஒரு விடயத்தை முன்னிருத்தி அதன் மூலம் வாக்குகளை பெற்று பின்னர் பழைய நிலைக்கு சென்று விடுவதென்று தொடர்ச்சியாக முஸ்லீம்கள் பாடம் கற்றுக் கொண்டு விட்டார்கள்.

இப்போது அமைச்சர் அதாஉல்லாஹ் என்ன பேசுகிறார், அதற்கு நாம் என்ன பதிலளித்தால் முஸ்லீம்களின் வாக்குகளை பெறலாம் என்கின்ற ஒருவகையான மாயையை அரசியலில் புகுத்தி அதன் மூலம் அரசியல் களம் காண சிலர் முற்படுகினற்னர்.

இது தவிர முஸ்லீம்களின் விடயத்தில் தங்களது நிலைப்பாட்டை முன்வைக்க தவறி விடுகின்றனர்.

13வது திருத்த சட்ட மூலம் தொடர்பாக தங்களது கருத்தை ஊடகங்களுக்கு முன்வைக்க தவறுகின்றனர். அதில் உள்ள விடயங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தத் தவறுகின்றனர்.

வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கங்களை செலுத்துகின்றன? பள்ளிவாசல் உடைப்பு, பொதுபலசேன போனற் அதிதீவர பேரினவாதிகளின் வருகை, என்பனவற்றை பேச மறந்து விடுகிறார்கள்.

தங்களுக்கே அர்த்தம ; புரியாமல் திவிநெகும சட்ட மூலத்ததுக்கு ஆதரவாக வாக்களித்ததை கணக்கில் எடுத்து கொள்வதுமில்லை.

இவ்வாறு பலதரப்பட்ட முக்கிய விடயங்களை பேசுவதை விட்டு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக ஜனாதிபதிக்கெதிராகத் தான் வாக்களித்தார்கள் என்றால் அது சமூகத்தை காட்டிக் கொடுத்து விட்டார் என்று பொருளாகுமா?

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லீம்களின் நிலை தொடர்பாக சரியான சந்தர்ப்பங்களின் நிலைமைகளை முன்கூட்டியே புரிந்து கொண்டு முடிவுகள் மேற்கொண்டது. யார் என்பதை நாம் கூறவேண்டிய அவசியமில்லை.

வடகிழக்கின் தற்காலிக இணைப்பை பிரித்து கிழக்கை தனி மாகாணமாக்கி இன்று சுதந்திர கிழக்கில் முஸ்லீம்களை நிம்மதியாக வாழவைத்து யார்?” என்றும் அஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*