மெட்ரோ மிரர் செய்திகளின் எதிரொலி; காரைதீவு மத்திய வீதி புனரமைப்பு வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

road4
பல மாதங்களாக கிடப்பில் கிடந்த காரைதீவு மத்திய வீதி புனரமைப்பு வேலைகள் மெட்ரோ மிரர் உள்ளிட்ட ஊடகங்களின் உதவியால் நேற்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

உலக வங்கி நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டு வந்த மத்திய வீதி வேலைகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தன.

அதனை பல தடவைகள் உரிய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கூறியும் எவ்வித பலனும் கிட்டவில்லை.

இறுதியில் மெட்ரோ மிரர் உள்ளிட்ட ஊடகங்களில் இது விடயம் தொடர்பில் செய்திகளும் கட்டுரைகளும் எமது சிறப்பு செய்தியாளர் அவர்களினால் எழுதப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வேலைகள் ஆரம்பமாயிருப்பது கண்டு மக்கள் ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை விபுலானந்தா வீதி- லெனின் வீதியைச் சந்திக்கின்ற சந்தியில் மரணப் பொறிகளாக வடிகான் மூடிகள் இல்லாமல் வீதியிருந்ததையும் மெட்ரோ மிரர் புகைப்படங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கான அத்தனை பெருமையும் நன்றியும் மெட்ரோ மிரர் சிறப்பு செய்தியாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களுக்கே சொந்தமாகும்.

roadroad5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*