யெமன் பிரதமர் மொஹமட் சாலிம் மீதான படுகொலை முயற்சி தோல்வி!

images

யெமன் பிரதமர் மொஹமட் சாலிம் பஸின்தவா மீதான படுகொலை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

அவர் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இதன்போது எதுவித காயமுமின்றி அவர் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தனது அலுவலகத்திலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது வாகனத் தொடரணி மீது அல்கொய்தா போராளிகள் துப்பாக்கிதாரிகள் சூட்டை நடத்தியுள்ளனர்.

யேமனில் அல் – கொய்தா போராளிகளின் செயற்பாடுகளை முறியடிக்க அந்நாட்டு அரசாங்கம் போராடி வருகிறது.

யெமன் தென் லாபோஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*