குருநாகல் மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழப்பு!

Hakeem (1)

(அய்யாஷ்)

இம்முறை வட மேல் மாகாண சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்பட்டுள்ளன.

கடந்த மாகாண சபையில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகித்த இந்த சபையில் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து போட்டியிட்ட போது நான்கு ஆசனங்களைப் பெற்றிருந்தன.

இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷ மட்டுமே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 11533 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே இருந்த மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் முஹமட் தஸ்லிம், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான நாஷர் மற்றும் அலவி ஆகிய மூவருமே தோல்வி அடைந்துள்ளனர்.

அங்கு இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் ஐந்து பேரும்,முஸ்லிம் காங்கிரஸில் ஐந்து பேரும் போட்டியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*