பலநூறு அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து கோர விபத்து; 12 பேர் பலி!

2809bus-fall

பண்டாரவளை – பூணாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் குடை சாய்ந்து பலநூறு அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

பலியானவர்களில் குறைந்தபட்சம் மூவர் பெண்கள் என என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.

காலநிலை சீர்கேடு மற்றும் பள்ளத்தின் நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் காயமடைந்தவர்களை தேடிக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*