பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிசானுக்கு விசேட பொறுப்பு!

Rizan MYP

பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை சர்வதேச வரவேற்பு மன்டபத்தில் 10.11.2013 தொடக்கம் 14.11.2013 வரை நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சாய்ந்தமருது ஏ.எல்.எம்.றிசான் (சகவாழ்வு பிரதி அமைச்சர்) கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி கலந்து கொள்கின்றார்.

இதன்போது உத்தேச தேசிய இளைஞர் கொள்கை பற்றி வெளிநாட்டு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஜனாதிபதி சாரணரும், பிரித்தானியா ‘டியூக்எடின்பார்க்’ பல்கலைகழத்தின் தலைமைத்துவம், ஆளுமை போன்ற துறைகளுக்கு சர்வதேச விருதினையும் பெற்றுக் கௌரவிக்கப்பட்டார்.

இவர் பொதுநலவாய மாநாடு வெற்றி பெற ஆற்றிவரும் சிறந்த பணிக்கு ஜனாதிபதியின் செயலாளர், இவருக்கு விசேட நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rizan (1)Rizan (3) Rizan (4)Rizan (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*