போதிராஜ மாவத்தை வர்த்தகத் தொகுதி தீப்பிடிப்பு; 64 கடைகள் முற்றாக எரிந்து நாசம்!

P1340521

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

புறக்கோட்டை- போதிராஜ மாவத்தையில் புதிதாக கட்டப்பட்ட கடைத் தொகுதி ஒன்று சற்று நேரத்திற்கு முன்னர் தீப்பிடித்துள்ளது.

இதனால் கடைத் தொகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 64 கடைகள் முற்றாக அழிவடைந்துள்ளன. ஆடைகள், பாதணிகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அடங்கிய சுமார் 64 கடைகளே தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.

பொலிஸாரும், தீ அணைப்புப் படையினரும் உடநடியா தீ அணைப்பில் செயற்பட்டு பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

இதன்போது வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களும் தீ அணைப்புப் படையினருக்கு முற்று முழுதான ஒத்துழைப்புக்களை வழங்கியதையும் காணக் கூடியதாகவுள்ளது.

P1340479P1340496 P1340508P1340534P1340527

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*