முன்னாள் அமைச்சர்கள் அமீர் அலி, நிஜாமுதீன், சுபைர், உதுமாலெப்பை உட்பட 14 பேர் அரச தரப்பில் குதிப்பு!

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சார்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் என மொத்தமாக ஏழு பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வேட்பாளர்களும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு வேட்பாளரும் திருகோணமலை மாவட்டத்தில் இரு வேட்பாளர்களும் என மொத்தமாக ஏழு பேர் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள்:

அம்பாறை மாவட்டம்;

ஜே.எம். சுபையிர் ஹாஜி – மருதமுனை
எம்.எல்.ஏ. அமீர் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) – சம்மாந்துறை
எம்.எஸ். உதுமாலெப்பை (முன்னாள் மாகாண அமைச்சர்) – அட்டளைச்சேனை
சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் – நிந்தவூர்
எம். பதுர்கான் – பொத்துவில்

திருகோணமலை மாவட்டம்;

எச்.எம்.எம். பாயிஸ் (முன்னாள் தவிசாளர். கி.மா.சபை) – கிண்ணியா
நவாஸ் மாஸ்டர் – மூதூர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்:

அம்பாறை மாவட்டம்;

எஸ்.நிஜாமுதீன் – பிரதி முன்னாள் அமைச்சர் – சாய்ந்தமருது

மட்டக்களப்பு மாவட்டம்;

எம்.எஸ். அமீர் அலி (முன்னாள் அமைச்சர்) – ஓட்டமாவடி
ஏ.எம்.சுபைர் (முன்னாள் மாகாண அமைச்சர்) – ஏறாவூர்
பொறியிலாளர் எம்.சிப்லி – காத்தான்குடி
எம். அப்துல் ஹக்கீம் – வாழைச்சேனை

திருகோணமலை மாவட்டம்;

டாக்டர் எம். ஹில்மி (கிண்ணியா நகர சபை தவிசாளர்) – கிண்ணியா
அஷ்ஷெய்க் அப்துர் ரஸாக் – தோப்பூர்

Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. Nijamudeen jayawava.

  2. halo my dear Arif Samsudeen Attorny at law we will pray for u insa allah u will win by tha help of alla may allah help u to get sucseed bye wsalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*