சுதந்திர தின வைபவ பிரதான இஸ்லாமிய நிகழ்வு கேகாலை ஜீம்ஆப் பள்ளிவாசலில் நடத்த ஏற்பாடு!

P1270893

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

இவ்வருட சுதந்திர தினத்தை கேகாலை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை முன்னிட்டு பிரதான இஸ்லாமிய சமய நிகழ்வினை கேகாலை ஜீம்ஆப் பள்ளிவாசலில் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் பெப்ரவரி 4ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*