கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவம்!

IMG_0006

(எம்.ஐ.சம்சுதீன், ஏ.எம்.அஸ்ஹர்)

கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின வைபவம் இன்று காலை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.எம்.றியாஸ் மற்றும் மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோர் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் விசேட வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது.

முதல்வர் நிசாம் காரியப்பர் அவரகள் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இவ்வைபவத்தில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_0008IMG_0015 IMG_0033 IMG_0029 IMG_0023 IMG_0035 IMG_0026 IMG_0021 IMG_0018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*