கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

IMG_4371

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 66வது சுதந்திரதின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை தெஹிவளை மீலாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரத்மலானை பிரதேச செயலாளர் ஹேமசிறி பியதிலக்க கலந்து கொண்டார். தேசியக் கொடியை பிரதம அதிதி ஏற்றி வைத்தார்

ஊடகவியலாளர் சங்கத்தினால் ஒரு தொகுதி நூல்ளையும் குர்ஆன் பிரதிகளும் நூல்களும் ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்லம், அதிபரிடம் கையளித்தார். அத்துடன் சங்கத்தின் பத்திரிகை ஆசிரியர் ஏ.எஸ்.எம்.ஜாவித் உரையாற்றினார்.

சங்கத்தின் செயலாளர் அஸரப் ஏ.சமட், பொருளாளர் மொம்மட் இம்தியாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

IMG_4282IMG_4325 IMG_4316

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*