சாய்ந்தமருதின் பல்வேறு இடங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள்!

2014-02-04 08.50.01
(ஹாசிப் யாஸீன்)

நாட்டின் 66வது சுதந்திர தின நிகழ்வுகள் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்; தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

தோட்ட பராமரிப்புக் குழுத் தலைவரும், பதிவாளரும், மரைக்காயருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.றஃசூக் (வெல்கம் நிசார்) தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றினை நாட்டி வைத்ததுடன் பள்ளிவாசல் மரைக்காயர்கள், உலமாக்கள், இளைஞர்களின் பங்குபற்றலுடன் பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது.

இதேசமயம் நாட்டின் 66வது சுதந்திர தின நிகழ்வுகள் சாய்ந்தமருது பிரதேச வர்த்தக நிலையங்களிலும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக சேவையாளரும், தொழிலதிபருமான சாமஸ்ரீ தேசமானிய எம்.எஸ்.எம்.முபாறக் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

இதன்பேது நாட்டின் சுவீட்சத்துக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் வேண்டி சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா அவர்களினால் துஆப் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.

இதேவேளை நாட்டின் 66வது சுதந்திர தின நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன்; தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

இதில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசியர்கள், சாரணிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2014-02-04 08.50.39 2014-02-04 08.51.14 2014-02-04 07.48.47 2014-02-04 07.41.09 2014-02-04 08.24.21 2014-02-04 08.26.46 (1) 2014-02-04 09.08.28 2014-02-04 09.04.18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*