சாய்ந்தமருது ஜும்மா பள்ளியில் ஆரம்பமாகும் தஜ்வீத் குர்ஆன் வகுப்பு!

Jumma Mosque

இன்று எமது சமூகத்தில் வாழும் நம் சகோதரர்கள் குர்ஆனை ஓதுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை முழுமையாக கருத்தில் கொண்டு தஜ்வீத் அடிப்படையில் குர்ஆனை கற்றுக்கொள்ளும் வகையில் இலவசமாக சாய்ந்தமருது வாழ் வாலிபர்கள் இளைஞ்சர்கள் பெரியோர்கள் படித்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஆண்களுக்கு என வடிவமைக்கப்பட்ட விஷேட வகுப்பு சாய்ந்தமருது ஜும்மாபள்ளியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இவ்வகுப்பானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஷா தொழுகையை தொடர்ந்து ஜூம்மாபள்ளிவாயலின் மேல் தளத்தில் நடைபெற உள்ளது. எதிர்வரும் 18.04.2014 வெள்ளிக்கிழமை முதலாவது வகுப்பு ஆரம்பமாகும்.

அரபு எழுத்து துறையில் தேர்ச்சி பெற்ற உலமக்களினால் விரிவுரைகள் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

ஆர்வமுடைய வாலிபர்கள் இளைஞ்சர்கள் பெரியோர்கள் படித்தவர்கள் அனைவரையும் இதில் பங்கு கொள்ளமுடியும்.

Quraanகீழ்வரும் கட்டுரையை நீங்கள் வாசிப்பதன் மூலம் மேற்ப்படி வகுப்பின் முழு பலாபலன்களையும் அறிய முடியும்

நம்மில் பலர், நம்முடைய பரபரப்பான இதயங்களுக்கு புனித குர்ஆன் எத்தனை மகிழ்ச்சியைத் தர முடியும் என்பதை உணராமல் இயந்திர கதியில் ஓதிக் கொண்டிருப்பது மிகவும் வருந்தக்கூடிய விஷயம்.

குர்ஆனை ஓதும் போது நமக்கு ஏன் திருப்தி ஏற்படுவதில்லை?

திருப்தியின்மைக்கு இரு முக்கிய காரணங்கள்

1. சரியில்லாத உச்சரிப்பு:

அது தான்!  நீங்கள் ஒரு கட்டுரையைப் படிக்கும்போது உங்களால் சரியாக உச்சரிக்க முடியவில்லையென்றால் ஆர்வத்துடன் தொடர முடியுமா? நிச்சயமாக முடியாது!

2. பொருள் புரியாமை:

நாம் படிப்பது என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், சிறிது நேரத்தில் சலிப்படைந்து விடுவோம்.

மேற்கூறிய இரண்டில் சரியில்லாத உச்சரிப்பு குர்ஆன் ஓதும்போது ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கும், அதனால், குர்ஆன் எப்படி ஓதப்பட வேண்டுமோ அப்படி ஓத தஜ்வீத் படிப்பது மிகவும் அவசியம்.

தஜ்வீத் என்றால் என்ன?

சுறுக்கமாகக் கூறுவதென்றால், தஜ்வீதை, சொல் திறன் என்று சொல்லலாம். குறிப்பாக சொல்வதென்றால், ஒவ்வொரு எழுத்தையும் அவற்றின் சட்டங்களைப் பின்பற்றி உச்சரித்தல்.

அவசியமா அல்லது பரிந்துரை செய்யப்பட்டதா?

தஜ்வீத் படிப்பது அத்தனை முக்கியமில்லை என எண்ணும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் அது அவசியமில்லை, சும்மா படித்தாலே நற்கூலி கிடைக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தஜ்வீத் படிப்பது எத்தனை அவசியம் என்பதை நமக்கு அறிவிக்கின்றன.

ஓதுதல் என்றால் என்ன?  அது எப்படி அருளப்பட்டதோ அதேபோல ஓதுதல், இந்த வசனம், அல்லாஹ் (சுபஹ்) தன் வேதம் எப்படி ஓதப்பட வேண்டும் என விரும்புகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது.

‘மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.’ [அல் குர்ஆன் 73:4]

இந்த வசனத்தில் உள்ள ‘தர்த்தீலன்’ என்ற சொல்லுக்கு அலீ இப்னு அபி தாலிப் (ரலி) அவர்கள், ‘அளவிடப்பட்ட ஓதுதல்’ (measured recitation), அதாவது எழுத்துக்களின் தஜ்வீத், எந்த இடத்தில் நிறுத்துவது என்பதை சரியாக அறிதல் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

குர்ஆன், ஒன்று உங்களுக்குச் சாதகமாக அல்லது உங்களுக்கு எதிராக சாட்சியளிக்கும் என்பது முஸ்லிமில் உள்ள ஒரு ஹதீஸ். இதன் பொருள், நாம் குர்ஆனை சரியாகப்படிக்க முயல வேண்டும். அப்படிச் செய்தால், குர்ஆன் நியாயத்தீர்ப்பு நாளன்று நமக்காக பரிந்துரை செய்யும், இல்லாவிட்டால், அது நமக்கெதிராக சாட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் எப்படி இருந்தது என உம்மு ஸலமா (ரலி) அவர்களைக் கேட்டபோது அவர்கள், ‘தெளிவாக, ஒவ்வொரு எழுத்தும் அடையாளம் காணும்படி இருந்தது’ என்றார்கள்.

இப்போது என்ன சொல்கிறீர்கள்? இது அவசியமா அல்லது பரிந்துரை செய்யப்பட்டதா?

தஜ்வீத் படிப்பதின் உபயோகங்கள்

1. மேன்மையான, கீழ்ப்படிதலுள்ள மலக்குகளின் அருகாமை:

ஆயிஷா (ரலி) அவர்கள், “குர்ஆனை மிகச்சரியாக ஓதுபவருடன் உயர்வான, கீழ்ப்படிதலுள்ள வானவர்கள் இருப்பார்கள், வசனங்களைத் திக்கித் திணறி சிரமத்துடன் ஓதுபவருக்கு இரு மடங்கு நன்மை உள்ளது” என அறிவிக்கிறார்கள்.[புகாரி, முஸ்லிம்]

2. மக்களில் சிறந்தவர்கள்:

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் சிறந்தவர், குர்ஆனைத்தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே.’ என கூறினார்கள் என்று. [புகாரி]

3. ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள்:

நபி (ஸல்) கூறினார்கள்,எவர் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தை வாசித்தாலும், அவருக்கு நன்மை உண்டு, அந்நன்மை பத்து மடங்காகும். நான் ‘அலீஃப், லாம், மீமை’ ஒரு எழுத்து என்று சொல்லவில்லை, மாறாக, ‘அலீஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து என்று சொல்வேன்.’ [திர்மிதி]

4. சுவனத்துக்கு வழி:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘நியாயத்தீர்ப்பு நாளன்று குர்ஆன் ஓதிய ஒருவர் அழைக்கப்பட்டு, ‘நீங்கள் உலகில் எப்படி நிதானமாக ஓதினீர்களோ, அதே போல் ஓதியபடியே சுவனங்களில் படித்தரங்களில் ஏறிச்செல்லுங்கள். உங்களுடைய தங்குமிடம் நீங்கள் உங்கள் ஓதுதல் எங்கு முடிகிறதோ அதுவாக இருக்கும்.’ [அபுதாவூது, திர்மிதி]

5. மனம் மற்றும் ஆன்மீக அமைதியும் திருப்தியும்:

ஹஸரத் பரா’ஆ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், ஒருவர் சூரத்துல் கஹஃப் ஓதும்போது அவருடைய குதிரை இரு கயிறுகளால் கட்டப்பட்டு அவரருகில் இருந்தது.  அச்சமயம் ஒரு மேகத்துண்டு அக்குதிரையை மூடிக்கொண்டது. அம்மிருகம் குதிக்கத்தொடங்கியது.  மறுநாள் காலையில் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இந்நிகழ்ச்சியை விவரிக்க, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அது, குர்ஆன் ஓதப்பட்டதால் இறங்கிய சகீனா (மன, ஆன்மீக அமைதியும், திருப்தியும்)’ [புகாரி, முஸ்லிம்]

சரி பார்க்க வேண்டிய பட்டியல்

நீங்கள் தஜ்வீதைக் கற்றபின், இப்பட்டியலோடு ஒப்பிட்டு உங்கள் தஜ்வீத் முழுமையாக இருக்கிறதா என பாருங்கள்:

1. எழுத்துக்களின் ஒலிகளின் பிறப்பிடங்கள்(articulation):

உங்களால் ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக உச்சரிக்க முடிந்தால், உங்கள் தஜ்வீத் அறிவு நன்றாக உள்ளது.

2. எழுத்துக்களின் தன்மைகளும் நாவைப் பயன்படுத்துவதும்:

நீங்கள் ஒவ்வொரு எழுத்தின் அம்சத்துடனும் பரிச்சயம் உள்ளவராக இருந்து, உங்கள் நா தன்னிச்சையாக அதை நோக்கி நகர்ந்தால், உங்களுடைய தஜ்வீத் இன்னும் நன்றாக இருக்கும்.

3. எழுத்துக்களில் விதிகள் மாறும்:

உங்களுக்கு ஒவ்வொரு எழுத்தும் மற்ற எழுத்துக்களோடு சேரும்போது எப்படி மாறும் என்ற விதிகள் மற்றும், எங்கே நிறுத்த வேண்டும் என்பதும் தெரிந்திருந்தால், உங்கள் தஜ்வீத் மிகச் சிறந்ததாக இருக்கும்!

கவலைப் படாதீர்கள். . . எனதருமை சகோதர, சகோதரிகளே, குர்ஆன் ஓதுவது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் கவலைப் படாதீர்கள். உங்களுக்கு இரு நன்மை உண்டு, ஏனென்றால்:

1. நீங்கள் குர்ஆனை ஓதுகிறீர்கள்

2. உங்களுக்கு அது சிரமமாக இருந்தாலும் அதைப் படிக்க உங்களால் இயன்ற வரை முயல்கிறீர்கள்.

வேறென்ன வேண்டும்? கற்கத் தொடங்கி குர்ஆனை அழகாக்கும் போது உங்களுக்குக் கிடைக்கும் அற்புதமான இன்பத்தை அனுபவியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*