பேஸ்புக் பயன்பாட்டினால் சிறுவர் துஷ்பிரயோகம் பெருமளவு அதிகரிப்பு!

anoma-dissanayake

பேஸ்புக் போன்ற இணையத்தள பயன்பாடு மூலம் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதை காண முடிவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அதிகாரச் சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

“நவீன தொழிற்நுட்பம் வளர்ச்சியுடன் பாடசாலை மாணவ, மாணவிகள் அதிகளவில் இணையத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனை பயன்படுத்தி சில நபர்கள் மிகவும் தந்திரமான முறையில் சிறுவர்களை பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் தமது பிள்ளைகளில் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக சிறுவர்கள் பெருமளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்” எனவும் அனோமா திஸாநாயக்க மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*