டிரக்டர் வாவியில் வீழ்ந்து 9 பேர் பலி; ஜீப் கவிழ்ந்து 2 கடற் படையினர் பலி!

Acdnt

பொலன்னறுவ, அரலகங்வில- அலுத்ஓய பிரதேசத்தில் சற்று முன்னர் இசட் டி வாவியில் டிரக்டர் (லேன் மாஸ்டர்) ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 9 பேரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் யசித பொல்லேகல அத தெரணவிடம் தெரிவித்தார்.

அங்கு மேலும் நான்கு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இருவர் ஆபத்தான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை திருகோணமலை – பொடவக்கட்டு – மதுரங்குடா பகுதியில் இடம்பெற்ற ஜீப் விபத்தில் கடற் படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மதுரங்குடா 41ம் கட்டை பகுதியில் குறித்த ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்து மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*