வடக்கில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்காதே! கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

-அஸ்ஜத்-

வடக்கில் மன்னார் மாவட்டத்திலும்,முஸ்லிம்களின் பிரதேசங்களிலும் முஸ்லிம் மீள்குடியேற செல்லும் போதும்,மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கும் போதும் அதற்கு எதிரான சதி திட்டங்கள் இடம் பெறுவதை கண்டித்து இன்று வெள்ளிகிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்விடுத்திருந்த அழைப்பின் பேரில் இந்த பேரணி வேகன்ந்த பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பித்து கொம்பனி வீதி வழியாக ,லேக்ஹவூஸ் சுற்றுவட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலகத்திற்கு செல்ல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முனைந்த போது,பொலீஸார் இரும்பு வேலிகளை இட்டு ஆர்ப்பாட்ட காரர்களை கட்டுப்படுத்தினர்.

தமக்கு சரியான பதிலை ஜனாதிபதி வழங்கும் வரை தாம் இங்கிருந்து விலகப் போவதில்யென தெரிவித்து ஆரப்பாட்த்தில் ஈடுபட்டவர்கள் நாடு வீதியில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் நீண்ட நேரம் போக்குவரத்து தடைகள் ஏற்பட்டன.

இதே வேளை ஆரப்பாட்டத்தில் ஈடபட்டவர்கள் மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்காதே.முஸ்லிம்களை வாழவிடு,தமது பூர்வீக மண்ணைினை மீட்டுத்த தாருங்கள்,மன்னார் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு புலிக் கூட்டு தமது கரங்களை நீட்டிவிட்டது.எமது முஸ்லிம் தலைமைகளை பாதுக்காக ஒன்றுபடுங்கள்,வடக்கில் தமது வாழ்வுரிமையயை ஜனாதிபதி அவர்களே உறுதிப்படுத்துங்கள்,போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் இங்கு காணமுடிந்தது.

சுமார் 3 மணித்தியாலயம் வரை இடம் பெற்ற ஆரப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் ஜனாதிபதி செயலகத்துக்கு மன்னார் மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் தலைமையில் சென்ற பிரதி நிதிகள் தமது கோறிக்கை அடங்கிய மகஜிரினை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*