முஸ்லிம் கர்ப்பிணித் தாயை வாகனத்தால் மோதிய கோடீஸ்வர வர்த்தகர் பொலிஸில் சரண்! Video

accident-pettah

புறக்கோட்டை குணசிங்கபுர பகுதியில் முஸ்லிம் கர்ப்பிணித் தாய் ஒருவரை வாகனத்தினால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கர்ப்பிணத் தாய் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்தை அடுத்து இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் சிங்கப்பூர் ஊடாக அமெரிக்காவிற்கு சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேகநபர் சரணடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுத்திருந்தாகவும் சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் அதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்பாளர் என்பதும் கோடீஸ்வர வர்த்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி- சக்தி TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*