ஊவாவில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு ஆப்பு; இரு உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு பாய்ச்சல்!

wimalweerawansa

ஊவா மாகாண சபையின் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் கெப்டன் மிஹிமல் முனசிங்க ஆளும் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று (22) இடம்பெற்ற ஊவா மாகாண சபைக் கூட்டத்தில் அவர் கட்சி மாறியுள்ளார்.

இதேவேளை, ஊவா மாகாண சபை தேசிய சுதந்திர முன்னணியின் மற்றுமொரு உறுப்பினரான டபிள்யு.ஏ.உதயகுமார அக்கட்சியில் இருந்து விலகி சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

2010 ஊவா மாகாண சபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மிஹிமல் முனசிங்க விருப்பு வாக்கு பட்டியலில் 6ம் இடத்தையும் உதயகுமார (மொனராகலை மாவட்டம்) 2ம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் கட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*