மக்களுடன் நெருங்கி சேவையாற்றும் உள்ளூராட்சி சபைகள் பலப்படுத்தப்பட வேண்டும்; அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு!

DSC_0318

(ஜே.எம்.வஸீர்)

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்தஉள்ளுராட்சி சபைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் மதுகம பிரதேச சபையின் நவீன வார சந்தை கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டதிற்காக 43 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன் புறநெகும திட்டத்தில் மொத்தமாக 108 வருமாணம் குறைந்த உள்ளூராட்சி சபைகள் இனங்காணப்பட்டு அதனுள் 90வது இடத்திலுள்ள சபையாக மதுகம பிரதேச சபை காணப்படுகின்றது..

இக்கட்டிட வேலைத் திட்டம் 2015 மார்ச் மாதம் நிறைவு பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா;

கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணத்திற்கமைய நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கேற்ப கிராமங்களுக்குத் தலைமை கொடுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களும் பலப்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும். மக்களுக்காக மக்களின் காலடியில் நெருங்கி சேவையாற்றக் கூடிய ஒரே நிறுவனம் என்றால் அது உள்ளுராட்சி சபைகளாகும்.

அதற்கமையவே நமது ஜனாதிபதி அவர்கள் நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளை அபிவிருத்தி செய்ய வழி காட்டுகின்றார். அதன் பிரகாரம் எனது அமைச்சு நாட்டிலுள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளினதும் தேவைகளை இனங்கண்டுஅவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது” என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் குமார வெல்கம, மதுகம பிரதேச சபையின் தலைவர் எல்.பி லியனாராட்சி மற்றும் புறநெகும செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஆனந்த கமகே உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

DSC_0285DSC_0296

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*