தென்கிழக்கு கலை இலக்கிய வாதிகளின் ஒன்றுகூடல்; சேகு இஸ்ஸதீன் பிரதம அதிதி; மெட்ரோ மிரர் ஊடக அனுசரணை!

segu-எம்.வை.அமீர்-

லக்ஸ்டோ மீடியா நெற்வேர்க் அமைப்பும் இலங்கை இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய முற்­போக்கு மன்­றமும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள தென்­கி­ழக்கு கலை இலக்­கி­ய­வா­தி­களின் ஒன்­று­கூ­டலும் இப்தார் நிகழ்வும் நாளை வெள்­ளிக்­கி­ழமை,மாலை 4.00 மணியளவில் சாய்ந்­த­ம­ருது மல்­ஹருல் சம்ஸ் மகா வித்­தி­யா­ல­ய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மணிப்­பு­லவர் மருதூர் ஏ.மஜீத் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ள இந்­நி­கழ்வில் முன்னாள் ஊட­கத்­துறை பிரதி அமைச்சர்- வேதாந்தி எம்.எச்.சேகு­ இஸ்­ஸதீன் பிர­தம அதி­தி­யா­க கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன் பிர­பல இலக்­கி­ய­வா­தி­க­ளான ஹஸன் மௌலானா, யூ.எல். ஆதம்­பாவா, எஸ். முத்­து­மீரான், தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக மொழித்­துறை தலைவர் றமீஸ் அப்­துல்லா, விரி­வு­ரை­யாளர் ஏ.எப்.எம்.அஷ்ரஃப், உலக இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநா­டு­களின் ஒருங்­கி­ணைப்­பாளர் வைத்­திய கலா­நிதி எம். தாசிம், கவிஞர் நவாஸ் சௌபி உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளனர்.

இதன்­போது, தென்­கி­ழக்கு பிராந்­தி­யத்தில் இலக்­கியத் துறையின் வளர்ச்சி பற்­றியும் இப் பிராந்­தி­யத்தில் இலக்­கி­யத்­து­றைக்­காக சேவை­யாற்றும் மூத்த படைப்­பா­ளிகள் கௌர­விப்பு சம்­பந்­த­மா­கவும் இளம் எழுத்­தா­ளர்­களின் விபரங்கள் தொகுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என லக்ஸ்டோ தலைவர் மருதூர் ஏ.எல்.அன்சார் JP தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு வசந்தம் எப்.எம், மெட்ரோ மிரர் என்பன ஊடக அனுசரணை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*