கல்முனை மாநகர சபை இப்தார் நிகழ்வில் பலஸ்தீன் முஸ்லிம்களுக்காக பிரார்த்தனை!

???????????????????????????????

கல்முனை மாநகர சபையின் இப்தார் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், எதிர்க்கட்சித் தட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம், உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், பெஸ்டர் றியாஸ், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், எம்.சாலிதீன், கமலதாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர், ஏ.எல்.எம்.அசுஹர்,  கணக்காளர் எச்.எம்.ரஷீத், பிரதம சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சிரேஷ்ட வேலைகள் அத்தியகட்சகர் எம்.ஐ.எம்.மஜீத், பதில் சட்ட அதிகாரி எம்.பி.எம்.பௌசான் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றிய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், இஸ்ரேலின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ள பலஸ்தீன் முஸ்லிம்களுக்காகவும் அண்மையில் பௌத்த பேரின வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர், பேருவளை முஸ்லிம்களுக்காகவும் இப்தார்- நோன்பு திறக்கும் தருணத்தில் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வைவபத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா விசேட மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தியதுடன் துஆப் பிரார்த்தனையையும் நடாத்தி வைத்தார். இதன்போது பலஸ்தீன் முஸ்லிம்களுக்காகவும் அவர் விசேடமாக பிரார்த்தனை செய்தார்.

இதில் கல்முனை மாநகரப் பிராந்தியத்திலுள்ள திணைக்களத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

?????????????????????????????????????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? Aslam moulana (3) ??????????????????????????????? ??????????????????????????????? Aslam moulana (11) ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. முக வெற்றிலை நகரான கல்முனை மாநகர இப்தார் வைபவத்தில் தொகுதி எம்.பி. கலந்து கொள்ளவில்லையா..? பிரதேச செயலக இப்தாரிலும் கலந்துகொள்ளவில்லை..இதிலும் இல்லை என்றால் அர்த்தம்???? அழைப்பில்லையா..புறக்கணிப்பா..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*