சீனா, மொரிஷியஸ் நாடுகளில் நிலநடுக்கம்; நேபாளத்தில் வெள்ளம்; 89 பேர் பலி; 139 பேரை காணவில்லை!

images (1)

மொரிஷியஸ் நாட்டில் இலே ரோட்ரிகஸ் தீவின் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலே ரோட்ரிகஸ் தீவுப்பகுதியின் கிழக்கில் 536 கி.மீ தொலைவில் உள்ள இந்திய பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நில நடுக்கம் 16.4 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்தது.

அந்நாட்டின் தலைநகரான போர்ட் லூயிஸிலிருந்து 1140 கி.மீ கிழக்காக இந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிஞ்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கின; அடுக்குமாடி குடியிருப்புகளின் சுவர்களில் லேசான விரிசல்கள் ஏற்பட்டன.

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவையில், 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனாலும், 15க்கும் மேற்பட்டோர், இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை நேபாள நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ளநதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அணைகள் நிரம்பி வழிவதால், நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.கர்னாலி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், மத்திய மேற்கு பகுதிகளில், 7,000 வீடுகளும், பார்டியா மாவட்டத்தில், 12 ஆயிரம் வீடுகளும் நீரில் மூழ்கின.’மழை வெள்ளத்தில் சிக்கி, 89 பேர் உயிரிழந்துள்ளனர்; 139 பேரை காணவில்லை’ என, நேபாள அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என,அஞ்சப்படுகிறது. @Tmr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*