18 பலஸ்தீனர்களுக்கு ஹமாஸ் அமைப்பினரால் மரண தண்டனை!

h

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 18 பலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

காஸா நகரில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு மத்தியில் குறித்த 18 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனை அளிக்கப்படும் என்றும் ஹமாஸ் அமைப்பினர் காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கொமாண்டர்கள் 3 பேர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

காஸாவில் அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை உள்ளூரில் உள்ள பாலஸ்தீனர்கள் தெரிவித்ததன் மூலமே இஸ்ரேல் மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தி கொமாண்டர்களைக் கொலை செய்தது என்ற சந்தேகம் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் 18 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்ததும் 18 பேரும் மசூதி அருகே கைகளைக் கட்டியும், முகத்தை மூடியும் அழைத்து வரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*