எஸ்.பீ திஸாநாயக்கவின் புதல்வர் ஹங்குரான்கெத்த சு.க. இணை அமைப்பாளராக நியமனம்!

tm(27)

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்கவின் சிரேஷ்ட புதல்வரான நாரத திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹங்குரான்கெத்த தொகுதியின் இணை அமைப்பாளராக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் அலரி மாளிகையில் வைத்து நேற்று பிற்பகல் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மொனெஷ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான பட்டதாரியான நாரத திஸாநாயக்க, கணித பொருளாதார விஞ்ஞான பட்டமேற்படிப்பை மேற்கொண்டதையடுத்து அந்த பல்கலைக்கழகத்திலேயே அவர், பொருளாதார விஞ்ஞான விரிவுரையாளராகவும் சேவையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*