எடின்பார்க் பல்கலையின் சர்வதேச விருதுக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிஸான் தெரிவு!

Rizan

பிரித்தானிய நாட்டின் ‘எடின்பார்க்’ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் சகவாழ்வு பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம். றிஸான், சர்வதேச ‘வெள்ளி’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவருக்கான விருது வழங்கப்படவுள்ளது. இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக அபிருத்தி செயற்பாடுகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சாரணியத்தில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதைப் பெற்றுக் கொண்ட இவர் 2008ஆம் ஆண்டு ‘சர்வதேச எடின்பார்க்’ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச வென்கல விருதை பெற்றுக் கொண்டார். 2011ம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் பெற்ற இவர் தற்போது தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் உத்தியோகத்தரக கடமையாற்றுகின்றார்.

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தற்போது திறந்த பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞான பீட மாணவனாகவும் இருந்து வருகின்றார். இவர் ஆதம்லெவ்வை சித்தியும்மா தம்பதியரின் இரண்டாவது புதல்வராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*