சவுதியில் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்பாளர்களை சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை!

Saudi

சவுதி அரசாங்கம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான மொழி பெயர்ப்பாளர்களையும், மத்தியஸ்த்தர்களையும் இணைத்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் அதிக அளவான இலங்கையர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் நீதிமன்ற செயற்பாடுகளின் போது மொழி தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக சவுதி அரேபியாவின் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரபு மற்றும் தமிழ் அல்லது சிங்களம் தெரிந்த, பட்டதாரிகள் அல்லது மொழிப்பெயர்ப்பு துறையில் குறைந்த பட்சம் மூன்று வருட அனுபவம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு மாதாந்தம் 4 ஆயிரம் சவுதி ரியால் வேதனம் வழங்கப்படுவதுடன், போக்குவரத்து செலவினம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*