இந்தோனேசியா கடற்கரை பகுதிகளில் கடும் நில நடுக்கம்!

ind

கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவுகளின் கடற்கரை பகுதிகளில் இன்று சற்று முன்னர் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலுக்கடியில் 22.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலவெசி தீவுகளில் உள்ள தென்கிழக்கு மோண்டாயாங் பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையத்தில் உள்ள இந்தோனேசியாவில் தொடர்ந்து பூகம்பம் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*