பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பயங்கரவாதம், கொலை தொடர்பாக வழக்கு தாக்கல்!

download (2)

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது பயங்கரவாதம், கொலை தொடர்பான புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்நாட்டு மாவட்ட நீதிமன்ற உத்தரவையடுத்து, பிரதமர் ஷெரீஃப், அவரது சகோதரர், மத்தியஅமைச்சர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, பயங்கரவாதம், கொலை தொடர்பான மேலும் ஒரு வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக, பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சித் தலைவர் தாஹிருல் காத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் ஷெரீஃப் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே விவகாரத்தில் ஷெரீஃபுக்கு எதிராக, பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான் புகார் அளித்தார்.

ஆனால் இதனை போஸீஸார் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிடும்படி, மாவட்ட நீதிமன்றத்தில் இம்ரான் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி அளித்த உத்தரவின்பேரில், புதிய வழக்கு ஒன்றை போலீஸார் பதிவு செய்தனர்.

ஷெரீஃபின் சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப், மத்திய உள்துறை அமைச்சர் நிஸார் அலிகான், மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை, கொலை முயற்சி, பயங்கரவாதம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*