கண்டி ஜின்னா மண்டபத்தை உடைத்து ஆக்கிரமித்தவர்கள் பிணையில் விடுதலை!

Court

கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டப கட்டிடத்தின் கதவுகளையும் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து அத்து மீறி பிரவேசித்த நபர்களில் ஐவரை கண்டி நீதிமன்ற நீதிவான் 500,000 ரூபா பிணையில் விடுதலை செய்துள்ளார்.

கண்டி டி.எஸ். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள ஜின்னா ஞாபகார்த்த மண்டப கட்டிடத்திற்குள்ளேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் கட்டிடத்தை நிர்வகித்து வரும் கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்க பிரமுகர்களும் கண்டி நகர அரசியல் வாதிகளும் பிரதேச பிரமுகர்களும் உடனடியாக அங்கு விரைந்து உட்புகுந்திருந்த சுமார் 18 க்கும் மேற்பட்டவர்களை வெளியேறுமாறு கோரிய போதும் அவர்கள் இக்கட்டிடம் எங்களுக்கு சொந்தமானது எங்களால் வெளியேற முடியாது என தெரிவித்ததையடுத்து இவ்விடயம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் அவர்களை வெளியேறுமாறு கேட்ட போதும் அவர்கள் மறுத்ததையடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் கட்டிட ஜன்னல் கண்ணாடிகளை கதவுகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐவரை கைது செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதிவான் குறித்த நபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் மாதத்தில் முதலாவது ஞாயிற்றுக்கிழமையும் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை மேலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 நபர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்ட பின்னர் அவர்களையும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். @Vkr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*