ஹிறா நகர் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து பெரும் அட்டகாசம்!

el (1)

(ஏ.எம்.ஆஷிப்)

அட்டாளைச்சேனை, பாலமுனை ஹிறா நகர் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து பெரும் அட்டகாசம் செய்துள்ளன.

இதனால் இக்கிராமத்தில் சில வீடுகளும் தேநீர்க்கடை ஒன்றும் சேதமடைந்துள்ளன. அத்துடன் தேநீர் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன.

மின்சார வசதியில்லாத இக்கிராமத்தில் கடந்த சில காலமாக காட்டு யானைகள் உட்புகுந்து உயிர், உடைமைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் தமது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த யானைகளின் அட்டகாசத்தினால் தமது வீட்டுத் தோட்டங்களுக்கும் பொருட்களும் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துமாறும் மின்சார வசதியை ஏற்படுத்தித் தருமாறும் அமைச்சர்கள், அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் நீண்ட காலமாக தாம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அவை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

el (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*