ஹொஸ்லந்தை மக்களுக்காக காரைதீவில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு!

???????????????????????????????

(காரைதீவு நிருபர்)

பதுளை ஹல்துமுல்ல ஹொஸ்லந்தையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட மக்களுக்கு உதவுமுகமாக இன்று சனிக்கிழமை காரைதீவில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

மனித அபிவிருத்தித்தாபனம் காரைதீவிலுள்ள ஏனைய தன்னார்வ பொது அமைப்புகளின் துணையோடு இம்மனிதாபிமானப்பணியை முன்னெடுத்திருந்தது. வீடுவீடாய் சென்று நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார்.

பலர் காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித்தாபன தலைமையகத்தில் நிவாரணப் பொருட்களைக் கையளித்துள்ளனர்.காரைதீவின்சமுகசேவை பொதுஅமைப்புகள் இணையத்தளங்கள் இப்பணிக்கு மிகுந்த ஒத்தாசையை அர்ப்பணிப்புடன் வழங்கிவருகின்றன.

வெள்ளியன்று கல்முனை தமிழ்பிரதேசசெயலகத்தினர் ஒரு தொகுதி நிவாரணப்பொருட்களை கையளித்திருந்தமை தெரிந்ததே.
இவ்வாரம் இப்பொருட்களைக் கொண்டுசென்று அங்கு பூணாகல மற்றும் வெரகல முகாம்களில் தஞ்சமடைந்துள்ள ஏதிலிகளுக்கு கையளிக்கப்படுமென இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார்.

கடந்த சுனாமி காலத்தில் மலையகத்திலிருந்து லாறிலாறியாய் நிவாரணப்பொருட்களை கொணர்ந்து அம்பாறை மாவட்டத்தில் மனிதாபிமானசேவையாற்றியது இம் மனித அபிவிருத்தித் தாபனம் என்பது இவ்வண் குறிப்பிடத்தக்கது.எனவே அந்த மக்களுக்கு பிரதியுபகாரமாய் உதவி செய்யக்கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்திவருகிறார்கள்.

??????????????????????????????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*