மைத்திரியின் பிரசார கூட்ட மேடை தீ வைத்து எரிப்பு; மற்றொரு கூட்டத்தில் துப்பாக்கி சூடு!

thakkuthal

காலி- வதுரப பகுதியில் இன்று மாலை 04.00 மணிக்கு இடம்பெறவிருந்த எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டிபேன்டர்களில் வந்த குழுவினரே இன்று அதிகாலை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அலங்காரங்களுக்கு தீ வைத்தமையால் வாகனம் ஒன்றும் எரிந்து நாசமாகியுள்ளது.

இதேவேளை நேற்று மாலை கல்நெவ- கலங்குடிய மவாத்தகம பிரசேத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*