மைத்திரியின் பிரச்சார மேடையை எரித்த அரச குண்டர்கள் மூவர் கைது!

download

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து வதுரம்ப பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார மேடைக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுகம மற்றும் காலி பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூவரும் இன்று பத்தேகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தன்னுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அப்பாவிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

தன்னை பலாத்காரமாக சிறை வைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு பணித்த நிலையில், சிசிடிவி கமாராவில் பதிவான காட்சிகளை கொண்டு வதுரம்ப பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*